/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பெண்ணே... உனது பிரச்னைக்கு உன்னிடமே தீர்வு இருக்கிறது'
/
'பெண்ணே... உனது பிரச்னைக்கு உன்னிடமே தீர்வு இருக்கிறது'
'பெண்ணே... உனது பிரச்னைக்கு உன்னிடமே தீர்வு இருக்கிறது'
'பெண்ணே... உனது பிரச்னைக்கு உன்னிடமே தீர்வு இருக்கிறது'
ADDED : மார் 09, 2024 08:15 AM

கோவை : இந்திய தொழில் கூட்டமைப்பு(சி.ஐ.ஐ.,) மற்றும் யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் மகளிர் மாநாடு, 2024 ரேஸ்கோர்ஸிலுள்ள தாஜ்விவாந்தா ஓட்டலில் நடந்தது.
சி.ஐ.ஐ., கோவை தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். யங் இந்தியன்ஸ் அமைப்பு கோவை தலைவர் விஷ்ணு பிரபாகர் முன்னிலை வகித்தார்.
இம்மாநாட்டிற்கு தலைமை வகித்த, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி பேசியதாவது:
பெண்கள் வெற்றி பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளும் போது, ஏராளமான சவால்களை சந்திக்க நேரிடும். அதை மதிநுட்பத்தால் எதிர்த்து போராடி வெல்ல வேண்டும்.
பிரச்னைகளையும், சவால்களையும் விவேகம், ஆளுமைத்திறனால் வெற்றிகரமாக மாற்ற முடியும். ஒவ்வொரு பெண்ணும் முதலில், சுயவளர்ச்சி, அடுத்தது குடும்பம், சமூகம், தேசத்தின் வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு வாழ வேண்டும். அப்போது வெற்றி என்பது எளிதாக மாறிவிடும்.
இவ்வாறு, மலர்விழி பேசினார்.
இந்நிகழ்ச்சியில், ஆந்திர மாநில முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி அருணா பகுகுணா, இந்திய கடற்படையை சேர்ந்த ஸ்ரீஸ்தி தாக்கூர் ஆகியோர் பேசினர். யங் இந்தியன்ஸ் அமைப்பு கோவை பிரிவு இணை தலைவர் நீல் கிக்கானி நிறைவுரையாற்றினார்.