/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவியர் டேபிள் டென்னிஸ்: அரசு பாலிடெக்னிக் அபாரம்
/
மாணவியர் டேபிள் டென்னிஸ்: அரசு பாலிடெக்னிக் அபாரம்
மாணவியர் டேபிள் டென்னிஸ்: அரசு பாலிடெக்னிக் அபாரம்
மாணவியர் டேபிள் டென்னிஸ்: அரசு பாலிடெக்னிக் அபாரம்
ADDED : ஜன 16, 2024 11:24 PM
கோவை;பாலிடெக்னிக் மாணவியருக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில், கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அணி அபாரமாக விளையாடி, முதலிடம் பிடித்தது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான (ஐ.பி.ஏ.ஏ.,) மண்டல அளவிலான போட்டிகள் பல்வேறு கல்லுாரிகளில் நடக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக மண்டல அளவிலான மாணவியர் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டி பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் எட்டு கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
இதன் இறுதிப்போட்டியில், கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அணி 3 - 2 என்ற செட் கணக்கில், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி அணியை வீழ்த்தி, சாம்பியன் கோப்பையை வென்றது.
வெற்றி பெற்ற மாணவியருக்கு, பி.எஸ்.ஜி., கல்லுாரியின் மெக்கட்ரானிக்ஸ் துறை பேராசிரியை சுஜாதா பரிசுகளை வழங்கினார். உடற்கல்வித்துறை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர்கள் உடனிருந்தனர்.
இதேபோல், பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த மாநில அளவிலான கோ-கோ போட்டியிலும், அரசு மகளிர் பாலிடெக்னிக் மாணவியர் முதலிடம் பிடித்து அசத்தினர்.

