தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாளைய தலைவர்களை இன்று உருவாக்கும் கீதாஞ்சலி

நாளைய தலைவர்களை இன்று உருவாக்கும் கீதாஞ்சலி

நாளைய தலைவர்களை இன்று உருவாக்கும் கீதாஞ்சலி


ADDED : அக் 03, 2024 08:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 03, 2024 08:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கீதாஞ்சலி பப்ளிக் பள்ளி, 2012ல், ஏ.வி.எம்., அறக்கட்டளை வாயிலாக நிறுவப்பட்டது. இதன் நிறுவனர் தலைவர் ஆடிட்டர் அழகிரிசாமியின் லட்சியக் கனவாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம், கல்வி கற்கும் மாணவர்களுக்கு அறிவுசார் வளர்ச்சி, நல்ல குணநலன்களை வளர்த்தல் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் சூழலை வழங்குகிறது.

ஒவ்வொரு மாணவரிடம் உள்ள தனித்துவமான திறன்களை வளர்க்கும் வகையில், ஆண்டு முழுவதும் பல்வேறு விதமான செறிவூட்டல் நிகழ்வுகளை முன்னெடுக்கிறது.

ஆண்டுவிழா, கலை விழாக்கள், கோவை அமைதி விழா, மாணவர் மன்றத் தேர்தல்கள் மற்றும் இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வு போன்ற செயல்பாடுகளின் வாயிலாக, பள்ளி மாணவர்களிடையே படைப்பாற்றல், தலைமைப் பண்பு போன்ற சிந்தைனைகளை வளர்க்கிறது.

தேசிய அறிவியல் தினம், விண்வெளி தினம், அறிவியல் கண்காட்சி, கலந்துரையாடல் அமர்வுகள், கருப்பொருள் விவாதங்கள், செயல்விளக்க சோதனைகள், மாணவர்கள் அறிவியல் கருத்துக்களை எளிமையாகவும் அணுகக்கூடிய வகையிலும் ஆராய ஊக்குவிக்கப்படுகின்றனர்.

'இஸ்ரோ', பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம், 'தினமலர்' அச்சு அலுவலகம் மற்றும் விமானப்படை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் மற்றும் 'ஸ்டெம்' திட்டம் போன்ற நவீன கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாணவர்களிடம் அறிவியல், விளையாட்டு, கலை மற்றும் கற்றல் மீதான ஆர்வத்தை புகுத்தி, நாளைய கண்டுபிடிப்பாளர்களாகவும், தலைவர்களாகவும் பிரகாசிக்க, தயார்படுத்தப்படுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us