UPDATED : ஆக 26, 2026 10:43 PM
ADDED : ஆக 26, 2026 08:32 PM
கோவை: சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில், கே.பி.ஆர்.
கலை அறிவியல் கல்லுாரியில் 'இக்னீஷியா' (IGNITIA) அறிவியல் கண்காட்சி நடந்தது. 49 பள்ளிகள் பங்கேற்றன. சுகாதாரம் மற்றும் மனித நலன், பேரிடர் தயார்நிலை மற்றும் காலநிலைத் தாங்குதிறன், சமூகத்துக்கான டிஜிட்டல் தொழில்நுட்பம், நிலையான வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய 4 பிரிவுகளில் 381 திட்டங்கள் பதிவு செய்யப்பட்டன. 7,8ம் வகுப்பு - சுகாதாரம் மற்றும் மனித நலன் பிரிவில் கீதாஞ்சலி பப்ளிக் பள்ளி மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்தனர். 8 ம் வகுப்பு மாணவர்கள் மிருதுளா மற்றும் ரகுநந்தன் ஆகியோர் முதல் இடத்தை பெற்று, 6000 ரூபாய் ரொக்கப் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர். 8 ம் வகுப்பு மகேந்திஸ்ரீ மற்றும் சாத்விகா இரண்டாம் இடம் பெற்றனர். அவர்களுக்கு, 3000 ரூபாய் ரொக்கப் பரிசு, பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன.
