/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகளுக்கு சிறுதானிய உணவு கொடுங்க! தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் அறிவுரை
/
குழந்தைகளுக்கு சிறுதானிய உணவு கொடுங்க! தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் அறிவுரை
குழந்தைகளுக்கு சிறுதானிய உணவு கொடுங்க! தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் அறிவுரை
குழந்தைகளுக்கு சிறுதானிய உணவு கொடுங்க! தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் அறிவுரை
ADDED : செப் 27, 2024 11:21 PM

ஆனைமலை: ஆனைமலை அருகே, தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு விழா நடந்தது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை சார்பில், வட்டார அளவிலான போஷன்மா நிகழ்ச்சியான, தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு விழா ஆனைமலை அருகே, நா.மு., சுங்கம் ராமு கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சூர்யா தலைமை வகித்தார். கல்லுாரி பேராசிரியர் பனிமலர் பேசினார். ஆனைமலை வட்டார டாக்டர் அபிநயா, ரத்த சோகை குறித்தும், ரத்த சோகை வராமல் தடுப்பது குறித்தும் விளக்கி பேசினார்.
அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் நெல்சன், மனநலம், ஆரோக்கியம் குறித்து விளக்கினார். மேலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக, கொழுக்கட்டை, இரும்பு சத்து தரும் முருங்கை கீரை சூப் ஆகியவை வழங்கப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு நடைபயிற்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டார ஒருங்கிணைப்பாளர், மேற்பார்வையாளர், குழந்தைகள் மைய பணியாளர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
வால்பாறை
வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில் தேசிய ஊட்டசத்து மாத விழா நடைபெற்றது. விழாவுக்கு, திட்ட அலுவலர் (பொ) சூரியா தலைமை வகித்தார். மேற்பார்வையாளர்கள் சாந்தி, புஷ்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் அனீஸ் வரவேற்றார்.
விழாவை, கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம் துவக்கி வைத்து பேசியதாவது:
தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டுமனால் சத்தான உணவு உட்கொள்வது மிக அவசியம். சிறுதானிய உணவு வகைகளை சிறுவயது முதலே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க நாள் தோறும் பால், முட்டை, கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு, பழ வகைகளை கொடுக்க வேண்டும். வாழ்க்கை வளம் பெற ஆரோக்கியம் தான் முக்கியம் என்பதை உணர்ந்து, சத்தான உணவுகளை உட்கொண்டாலே, நோய் வராமல் தடுக்கலாம்.
இவ்வாறு, பேசினார்.
தொடர்ந்து, அரங்கில் அமைக்கப்பட்ட கண்ணாட்சியை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். விழா ஏற்பாடுகளை, அங்கன்வாடி பணியாளர்கள் செய்திருந்தனர்.