/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழிலாளர்களுக்கு 3 சென்ட் இடம் கொடுங்க! தேர்தல் வாக்குறுதியை நினைவுபடுத்துறாங்க
/
தொழிலாளர்களுக்கு 3 சென்ட் இடம் கொடுங்க! தேர்தல் வாக்குறுதியை நினைவுபடுத்துறாங்க
தொழிலாளர்களுக்கு 3 சென்ட் இடம் கொடுங்க! தேர்தல் வாக்குறுதியை நினைவுபடுத்துறாங்க
தொழிலாளர்களுக்கு 3 சென்ட் இடம் கொடுங்க! தேர்தல் வாக்குறுதியை நினைவுபடுத்துறாங்க
ADDED : ஏப் 21, 2025 09:29 PM

வால்பாறை,; வால்பாறை நகரில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, வீடு கட்ட இடம் வழங்க வேண்டும் என, தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை நகர் ஒரு கி.மீ., சுற்றளவில் அமைந்துள்ளது. எஸ்டேட்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி ஓய்வுக்கு பின், தங்குவதற்கு வீடு இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
வால்பாறை நகரை சுற்றிலும் தனியார் தேயிலை தோட்டங்கள் ஆக்கிரமித்துள்ள இடங்களை, மறு சர்வே செய்து, ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு, தேயிலை தொழிலாளர்களுக்கு வீடு கட்ட இடம் வழங்க வேண்டும் என்பது, 30 ஆண்டுகால கோரிக்கையாக உள்ளது.
தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற பல்வேறு கட்சியினர், அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனாலும் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்காததால், தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர்.
மேலும், பணி ஓய்வு பெறுவோர், வால்பாறையை விட்டு வெளியேற வேண்டும், அல்லது வாடகை வீட்டில் வசிக்கும் நிலையே உள்ளது.
தொழிலாளர்கள் கூறியதாவது:
பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த மக்கள், எஸ்டேட்களில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். குறைவான கூலி வழங்கப்பட்ட நிலையிலும் கடந்த மூன்று தலைமுறையாக எஸ்டேட்களில் பணிபுரிந்து வருகிறோம்.
ஆனால், எங்களுக்கு வீடு கட்ட ஒரு சென்ட் இடம் கூட இது வரை வழங்கவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல்வாதிகள் வீடு கட்ட, தலா, மூன்று சென்ட் இடம் வழங்குவோம், என வாக்குறுதியளித்தனர். தேர்தலுக்கு பின், வாக்குறுதியை மறந்து விடுகின்றனர்.
எனவே, தொழிலாளர்களின் நலன் கருதி, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, தொழிலாளர்களுக்கு தலா மூன்று சென்ட் வீதம் வழங்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.