/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சமூகத்துக்கு திரும்பக் கொடுப்பது ஒவ்வொருவரின் கடமை; துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
/
சமூகத்துக்கு திரும்பக் கொடுப்பது ஒவ்வொருவரின் கடமை; துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
சமூகத்துக்கு திரும்பக் கொடுப்பது ஒவ்வொருவரின் கடமை; துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
சமூகத்துக்கு திரும்பக் கொடுப்பது ஒவ்வொருவரின் கடமை; துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
ADDED : ஜன 23, 2026 12:56 PM

- நமது நிருபர் -
''சமூகத்துக்கு திரும்பக் கொடுப்பது ஒவ்வொருவரின் கடமை,'' என, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
ஜெம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பழனிவேலுவின், சுயசரிதை புத்தக ஹிந்தி பதிப்பு வெளியிட்டு விழா டில்லியில் நடந்தது. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது: டாக்டர் பழனிவேலு, சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர். அவர், 1990களின் முற்பகுதியிலேயே லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையின் திறனை அங்கீகரித்தவர். கோவையில், 1991ல் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையை அறிமுகப்படுத்தியவர்.
அவரது சுயசரிதை மருத்துவத் துறையில் தைரியம், விடாமுயற்சி மற்றும் அசைக்க முடியாத நெறிமுறை அர்ப்பணிப்புக்கு ஊக்கமளிக்கும் சான்று. இத்தகைய ஒரு மனிதரின் சுய சரிதை ஹிந்தி பதிப்பு வெளியீடு முக்கியமானது.
இச்சமூகத்தின் பரந்த பிரிவினர், குறிப்பாக ஹிந்தி படிப்பவர்கள் இந்த அற்புதமான வாழ்க்கைப் பயணத்தை அணுக, அதிலிருந்து உத்வேகம் பெற வழிவகுக்கும். ஒவ்வொரு தனிமனிதனையும் வடிவமைப்பதில் சமூகம் முக்கிய பங்கு வகிக்கிறது. சமூகத்துக்கு திரும்பக் கொடுப்பது ஒவ்வொருவரின் கடமை.
தொலை துாரத்தில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்க, குறைந்த செலவில் அறுவை சிகிச்சை நுட்பங்களை உருவாக்க டாக்டர் பழனிவேலு முயற்சி எடுத்துள்ளார். இப்புத்தகம் எதிர்கால தலைமுறையினரை தைரியமாக கனவு காணவும், நேர்மையுடன் உழைக்கவும், சமூகத்துக்கு தன்னலமின்றி சேவை செய்யவும் துாண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
ஜெம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பழனிவேலு பேசுகையில்,''இப்புத்தகம், ஒரு நிறைவான வாழ்க்கை வாழ அவசியமானவை என நான் நம்பும் கொள்கைகள், நற்பண்புகளின் தொகுப்பு. ''இப்புத்தகத்தின் மூலம் மற்றவர்கள் தங்கள் எல்லைகளுக்கு அப்பால் செல்லவும், போராட்டங்களை தழுவவும், அவற்றை பெரிய சாதனைகளுக்கான ஊஞ்சலாக பயன்படுத்தவும் துாண்டுவேன் என, நம்புகிறேன்,'' என்றார்.
நிகழ்ச்சியில், ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங், தேசிய மருத்துவ ஆணைய தலைவர் டாக்டர் அபிஜத் ஷெத், பல்கலைகளுக்கு இடையேயான ஆசிரியர் கல்வி மையம் நிர்வாகக் குழுத் தலைவர் ராஜ்புத் மற்றும் ஜெம் மருத்துவமனை குழுமத்தின் மூத்த பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

