/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிறந்த குழந்தைகளுக்கு தங்க நாணயம் வழங்கல்
/
பிறந்த குழந்தைகளுக்கு தங்க நாணயம் வழங்கல்
ADDED : டிச 01, 2025 04:59 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு, தெற்கு நகர தி.மு.க. சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, தங்க நாணயம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தெற்கு நகர பொறுப்பாளர் அமுதபாரதி தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன், நிகழ்ச்சியை துவக்கி வைத்து, கடந்த, 27ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க நாணயம், நலத்திட்டஉதவிகளை வழங்கினார்.
மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் டாக்டர் மகேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து, மாவட்ட பொருளாளர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.
மொத்தம், 11 குழந்தைகளுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது. நகராட்சித்தலைவர் சியாமளா, வடக்கு நகர பொறுப்பாளர் நவநீத கிருஷ்ணன், துணைத்தலைவர் கவுதமன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன் மற்றும் பலர் பங்கேற்றனர். கவுன்சிலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

