ADDED : செப் 30, 2024 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சார்பில் ஓவியப் போட்டி, பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் நடந்தது.
இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல்., மேலாளர் பாலாஜி, பள்ளித்தாளாளர் மாரிமுத்து, செயலாளர் ரவிச்சந்திரன், பள்ளி முதல்வர் பிரகாஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.