/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மூன்று சொற்களுக்கு உருவம் கொடுத்தால் அதுதான் வள்ளலார்'
/
'மூன்று சொற்களுக்கு உருவம் கொடுத்தால் அதுதான் வள்ளலார்'
'மூன்று சொற்களுக்கு உருவம் கொடுத்தால் அதுதான் வள்ளலார்'
'மூன்று சொற்களுக்கு உருவம் கொடுத்தால் அதுதான் வள்ளலார்'
ADDED : ஜன 03, 2024 12:34 AM

கோவை:''ஜீவகாருண்யம், ஆன்ம நேய ஒருமைப்பாடு, மரணமில்லா பெருவாழ்வு என்ற மூன்று சொற்களும் சேர்ந்ததே வள்ளலார்,'' என, ஆன்மிக சொற்பொழிவாளர் ஸ்ரீ கிருஷ்ண ஜகந்நாதன் பேசினார்.
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நடந்த, 'எப்போ வருவாரோ' என்ற ஆன்மிக தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில், 'அருளாளர் வள்ளலார்' என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவாளர் ஸ்ரீ கிருஷ்ண ஜகந்நாதன் பேசியதாவது:
ஜீவகாருண்யம், ஆன்ம நேய ஒருமைப்பாடு, மரணமில்லா பெருவாழ்வு ஆகிய மூன்று சொற்களுக்கும் சேர்த்து வடிவம் கொடுத்தால், அதுவே வள்ளலார். வள்ளலார், 6,733 பாடல்களை பாடியுள்ளார். சனாதன தர்மத்தை வாழ்விக்க வந்தவர் வள்ளலார்.
முதன்முதலில், தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழி பாடப்பிரிவுகளை கொண்டு வந்தவர் வள்ளலார். அக்னிக்கு ஒளி கொடுப்பது அருட்பெரும்ஜோதி.
நம்மால் கேட்க முடியாத ஒலிகளை, இழுத்து கொடுத்ததுதான் வேதம். அந்த வேதத்தின் பொருட்களை சொல்வதற்காக வந்ததுதான் இதிகாசம். நமக்கு ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்கள் மட்டுமே தெரியும். மூன்றாவது இதிகாசம், சிவரகசியம் என, வள்ளலார் கூறியுள்ளார்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.