/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடியை புதுப்பித்த ஜி.கே.என்.எம்., மருத்துவமனை
/
அங்கன்வாடியை புதுப்பித்த ஜி.கே.என்.எம்., மருத்துவமனை
அங்கன்வாடியை புதுப்பித்த ஜி.கே.என்.எம்., மருத்துவமனை
அங்கன்வாடியை புதுப்பித்த ஜி.கே.என்.எம்., மருத்துவமனை
ADDED : பிப் 10, 2024 09:09 PM

கோவை:ஜி.கே.என்.எம்., மருத்துவமனையின் சார்பில், நிறுவனங்களின் சுற்றுச்சூழல் பொறுப்பின் ஒரு பகுதியாக, கூடலுார் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அங்கன்வாடி மையம் மேம்படுத்தி புதிப்பிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தை அர்ப்பணிக்கும் விழா, பள்ளி வளாகத்தில் நடந்தது.
இதில், ஜி.கே.என்.எம்., மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி, மாணவர்களின் பயன்பாட்டிற்கு அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, மாணவர்களுக்கு புத்தகப்பை இலவசமாக வழங்கப்பட்டது. கூடலுார் நகராட்சித் தலைவர் அறிவரசு, பள்ளி தலைமை ஆசிரியர் லோகநாயகி, டாக்டர் பரிமளா ஆகியோர் கலந்துகொண்டனர்.