/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'குளோபல் பிராமின்' அமைப்பு ராம் நகரில் முப்பெரும் விழா
/
'குளோபல் பிராமின்' அமைப்பு ராம் நகரில் முப்பெரும் விழா
'குளோபல் பிராமின்' அமைப்பு ராம் நகரில் முப்பெரும் விழா
'குளோபல் பிராமின்' அமைப்பு ராம் நகரில் முப்பெரும் விழா
ADDED : ஆக 04, 2025 11:25 PM

கோவை; குளோபல் பிராமின் வெல்பேர் போரம் அமைப்பு சார்பில், முப்பெரும் விழா ராம்நகர் சுபஸ்ரீ ஹாலில் நடந்தது .
சிறப்பு விருந்தினராக சங்கரா ஐகேர் நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ரமணிக்கு, 'நம்பிக்கை பார்வை' என்ற பட்டம் அளித்து கவுரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக தொண்டாற்றும் க்ரீன் 'லா' நிறுவனத்தின் முதன்மை அதிகாரி அவினாஷ் நாராயண் சுவாமிக்கு, 'சுற்றுச்சூழல் தொலைநோக்கு முன்னோடி' என்ற பட்டமும், கேடயமும் வழங்கப்பட்டது.
நீர் மோர் பந்தல் சேவைதிட்டத்தில் நேரம், பொருளுதவி மற்றும் உடல் உழைப்பு நல்கிய குழு உறுப்பினர்கள் பாராட்டப்பட்டனர். பொருளாதாரத்தில் நலிவுற்றஅரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சீருடை, நோட்டுப்புத்தகம் மற்றும் கல்வி கட்டணம் வழங்கப்பட்டது.
குளோபல் பிராமின் வெல்பேர் போரம் அமைப்பு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் ராஜ் மோகன், பொருளாளர் கோவிந்த கிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.