/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேம்போர்டு பள்ளிக்கு உலகளாவிய அங்கீகாரம்
/
கேம்போர்டு பள்ளிக்கு உலகளாவிய அங்கீகாரம்
ADDED : அக் 02, 2025 11:49 PM

கோவை;லண்டனில் உள்ள இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், குளோபல் லீடர்ஸ் உச்சி மாநாடு மற்றும் 2025க்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், கேம்போர்டு சர்வதேச பள்ளிக்கு, 'இந்தியாவின் சிறந்த பள்ளிக்கான விருது' வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை, ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் உறுப்பினர் லார்ட் ப்ரென்னன், பள்ளியின் மாணவர் மேம்பாடு மற்றும் கற்றல் பற்றிய, அதன் பார்வையை அங்கீகரித்து வழங்கினார். பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ் மற்றும் தாளாளர் பூங்கோதை ஆகியோர், விருதை பெற்றுக்கொண்டனர்.
பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ், ''இந்த உலகளாவிய அங்கீகாரம் கேம்போர்டு சர்வதேச பள்ளியின் உயர்ந்த நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது,'' என்றார்.