/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலகளாவிய 'ஸ்டார்ட்அப்' மாநாடு; கொடிசியாவில் அக்.,ல் நடக்கிறது
/
உலகளாவிய 'ஸ்டார்ட்அப்' மாநாடு; கொடிசியாவில் அக்.,ல் நடக்கிறது
உலகளாவிய 'ஸ்டார்ட்அப்' மாநாடு; கொடிசியாவில் அக்.,ல் நடக்கிறது
உலகளாவிய 'ஸ்டார்ட்அப்' மாநாடு; கொடிசியாவில் அக்.,ல் நடக்கிறது
ADDED : ஆக 04, 2025 08:18 PM
கோவை; கோவை, கொடிசியா வளாகத்தில், 'உலகளாவிய ஸ்டார்ட் அப் மாநாடு 2025' வரும் அக்., 9, 10ம் தேதிகளில் நடக்கிறது.
டி.என்.,ஸ்டார்ட்அப் நிறுவனம் சார்பில் நடக்கும், உலகளாவிய ஸ்டார்ட்அப் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், 150க்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச பேச்சாளர்கள், 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், 100க்கும் மேற்பட்ட முதலீட்டு உத்தரவாதங்கள், முதலீட்டாளர்கள், பல்கலை பிரதிநிதிகள் உட்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
விண்வெளி தொழில்நுட்பம், மின் வாகனம், வேளாண்மை, காலநிலை மாற்ற மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், அரசுத் துறைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், 150க்கும் மேற்பட்ட மாணவர் ஸ்டார்ட் அப்கள் என, 750 ஸ்டால்கள் இடம்பெறுகின்றன.
மாநாட்டை முன்னிட்டு, அறிவுசார் கருத்தரங்குகள், சந்தைவாய்ப்புகளை உருவாக்க விற்பனையாளர் வாடிக்கையாளர் சந்திப்புகள், முதலீட்டாளர்கள் சந்திப்புகள், புத்தகக்காட்சி அரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன.
ஸ்டார்ட்அப் மாநாட்டில் பங்கேற்க, https://tngss.startuptn.in/home என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.