/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லுாரிகள் இடையே கோ-கோ; அரசு தொழில்நுட்பக் கல்லுாரி முதலிடம்
/
கல்லுாரிகள் இடையே கோ-கோ; அரசு தொழில்நுட்பக் கல்லுாரி முதலிடம்
கல்லுாரிகள் இடையே கோ-கோ; அரசு தொழில்நுட்பக் கல்லுாரி முதலிடம்
கல்லுாரிகள் இடையே கோ-கோ; அரசு தொழில்நுட்பக் கல்லுாரி முதலிடம்
ADDED : பிப் 19, 2025 10:50 PM

கோவை; கோ-கோ இறுதிப்போட்டியில், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி அணி, 17-11 என்ற புள்ளிகளில், எஸ்.என்.எஸ்., டெக் அணியை வென்று, முதலிடம் பிடித்தது.
எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரியின் உடற்கல்வித் துறை சார்பில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரி அணிகள் பங்கேற்ற, 'சென்டைஸ்' எனும் விளையாட்டு போட்டிகள், இரு நாட்கள் நடந்தன.
கூடைப்பந்து, எறிபந்து, வாலிபால் உள்ளிட்ட போட்டிகளில், 100க்கும் மேற்பட்ட வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
பல்வேறு சுற்றுகளை அடுத்து, நடந்த எறிபந்து இறுதிப்போட்டியில் கலைஞர் கருணாநிதி கல்லுாரி அணி, 2-1 என்ற செட் கணக்கில், எஸ்.என்.எஸ்., டெக் அணியை வென்று, முதலிடம் பிடித்தது.
கோ-கோ இறுதிப்போட்டியில், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி அணி, 17-11 என்ற புள்ளிகளில், எஸ்.என்.எஸ்., டெக் அணியையும், பால் பேட்மின்டன் இறுதிப்போட்டியில் கே.பி.ஆர்., அணி, 2-0 என்ற செட் கணக்கில், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணியையும் வென்றது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, கல்லுாரி முதல்வர் செந்துாரபாண்டியன், துணை முதல்வர்கள் விவேகானந்தன், தமிழ்செல்வன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

