/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பார்த்து' போங்க! பச்சை, மஞ்சள், சிவப்பு சிக்னல்; தேங்கும் நீரில் சிக்க மாட்டீங்க; சிவானந்தா காலனியில் சிறப்பு!

ADDED : அக் 16, 2024 10:16 PM

கோவை : கோவை சிவானந்தா காலனி ரயில்வே பாலத்தில், தண்ணீர் தேங்கியிருக்கும் சமயத்தில், வண்ண எச்சரிக்கை அடையாளத்தை பார்த்து விட்டு, வாகன ஓட்டிகள் கடக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கென, புதிதாக பச்சை, மஞ்சள், சிவப்பு பெயின்ட் அடிக்கப்பட்ட கம்பம், பாலத்தின் துவக்கத்தில் நிறுவப்பட்டுள்ளது.
கோவையில் சில நாட்களுக்கு முன் பெய்த மழைக்கு, சிவானந்தா காலனி ரயில்வே பாலத்துக்கு கீழ் தேங்கிய தண்ணீரில், இரண்டு பஸ்கள் சிக்கின. தண்ணீர் தேங்குவதற்கான காரணத்தை, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில், பாலத்துக்கு இருபுறமும் உள்ள மழை நீர் வடிகால் துார்வாராமல் இருந்ததும், அடைப்புகள் ஏற்பட்டு இருந்ததும் கண்டறியப்பட்டது. சிறிய அளவிலான வழித்தடமாக இருந்தது.
அதனால், மேட்டுப்பாளையம் ரோட்டில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீரை வடிகாலில் கீழிறக்கி, சங்கனுார் பள்ளத்தில் சேர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாலத்தில் தண்ணீர் தேங்கியிருந்தால் கடக்கலாமா, கூடாதா என்பதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், பச்சை, மஞ்சள், சிவப்பு நிற வண்ண எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
பாலத்தில் ஒரு அடிக்கு தண்ணீர் தேங்கியிருப்பதை காட்டும் வகையில், பச்சை நிறம் குறியிடப்பட்டுள்ளது; அப்போது, வாகனத்தில் செல்லலாம். இரண்டு அடிக்கு தண்ணீர் தேங்கினால், மஞ்சள் நிறம் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
அச்சமயத்தில் வாகனத்தில் பாலத்தை கடக்கலாம்; கவனமாக செல்ல வேண்டும்.
இரண்டு அடிக்கு மேலாக தண்ணீர் இருப்பதை தெரிவிக்கும் வகையில், 'டேஞ்சர்' என்பதை அறிவதற்காக, சிவப்பு நிற குறியீடு செய்யப்பட்டுள்ளது.
அச்சமயத்தில் நடந்தோ அல்லது வாகனத்திலோ பாலத்தை கடக்கக் கூடாது என, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.