/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆஞ்சநேயர் சுவாமி கோவிலுக்கு முட்டியிட்டு சென்று நேர்த்திக்கடன்
/
ஆஞ்சநேயர் சுவாமி கோவிலுக்கு முட்டியிட்டு சென்று நேர்த்திக்கடன்
ஆஞ்சநேயர் சுவாமி கோவிலுக்கு முட்டியிட்டு சென்று நேர்த்திக்கடன்
ஆஞ்சநேயர் சுவாமி கோவிலுக்கு முட்டியிட்டு சென்று நேர்த்திக்கடன்
ADDED : பிப் 04, 2024 02:43 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலுக்கு, பெண் ஒருவர் முட்டியிட்டு வந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ராமபட்டணத்தை சேர்ந்த இளமதி,36; கூலித்தொழிலாளி. இவருக்கு, 11 வயதில் மகள்; 14 வயதில் மகன் உள்ளனர்.
இந்நிலையில், இவரது மகளுக்கு டெங்குகாய்ச்சல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டார். உடல் நலம் சரியாக வேண்டும் என, பொள்ளாச்சி அருகே உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் வேண்டுதல் வழிபாடு செய்தார்.
தற்போது, மகள் குணமாகி விட்டதால் நேற்று கோவிலுக்கு வந்த இளமதி, நேர்த்திக்கடனை செலுத்தினார். பஸ் ஸ்டாப்பில் இருந்து, கோவிலுக்கு ஒரு கி.மீ., துாரம் முட்டியிட்டு சென்று நேர்த்திக்கடனை செலுத்தினார். உடன் அவரது மகன், மகளும் வந்திருந்தனர்.
நேற்று, சனிக்கிழமை ஆஞ்சநேய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், நேர்த்திக்கடன் செலுத்துவதை வீடியோ, போட்டோ எடுத்து, சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். இது, இறைவன் மீதான பக்தியை வெளிப்படுத்துகிறது என, பக்தர்கள் தெரிவித்தனர்.