/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்ணிடம் ஆன்லைன் மோசடி கோவாவை சேர்ந்த வாலிபர் கைது
/
பெண்ணிடம் ஆன்லைன் மோசடி கோவாவை சேர்ந்த வாலிபர் கைது
பெண்ணிடம் ஆன்லைன் மோசடி கோவாவை சேர்ந்த வாலிபர் கைது
பெண்ணிடம் ஆன்லைன் மோசடி கோவாவை சேர்ந்த வாலிபர் கைது
ADDED : மார் 29, 2025 11:37 PM

கோவை:ஆன்லைன் டிரேடிங்கில் அதிக லாபம் ஈட்டித் தருவதாக கூறி, பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தவரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கோவை, சிங்காநல்லுாரை சேர்ந்தவர் தீபிகா, 50 (பெயர் மாற்றப்பட்டுள்ளது); தனியார் நிறுவன ஊழியர். கடந்தாண்டு அக்., 31ம் தேதி இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் ஆன்லைன் டிரேடிங்கில், அதிக லாபம் ஈட்டித் தருவதாக குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து, தீபிகா அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, எதிரில் பேசியவர் 'இன்வெஸ்ட்மென்ட் மணி கிரோத் பிளான்' என்ற திட்டத்தில், முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை காட்டியுள்ளார்.
இதை நம்பி, தீபிகா ரூ. 8.65 லட்சம் பணத்தை, பல்வேறு தவணைகளில் மோசடி நபர்கள் அளித்த வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார். பின்னர், லாபம் கேட்ட போது, மேலும் பணம் செலுத்த கூறியுள்ளார்.
அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது, மோசடி செய்த நபர் கோவாவை சேர்ந்த ராமச்சந்திரன், 37 என்பது தெரியவந்தது.
போலீசார் கோவா சென்று, குற்றவாளியை கைது செய்து கோவை அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.

