/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடு, கோழி வளர்ப்போர் சங்க உறுப்பினர் சேர்க்கை
/
ஆடு, கோழி வளர்ப்போர் சங்க உறுப்பினர் சேர்க்கை
ADDED : ஆக 20, 2025 09:31 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கால்நடைத்துறை கோட்டத்தில், புதிதாக கால்நடைத்துறை வாயிலாக ஆடு மற்றும் கோழி வளர்ப்போருக்கு தனித்தனியாக சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 39 கால்நடை மருந்தகங்களுக்கு உட்பட்ட பகுதியில், தலா ஒரு ஆடு வளர்ப்போர் சங்கம் மற்றும் கோழி வளர்ப்போர் சங்கம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, விவசாயிகள் பலர், தங்களது பெயர்களை அந்நந்த பகுதி கால்நடை மருந்தகங்களில் பதிவு செய்து வருகின்றனர். கண்காணிப்பு அலுவலராக செயல்படும் கால்நடை டாக்டர்கள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டுகின்றனர்.
கால்நடைத்துறையினர் கூறுகையில், 'சங்கம் உருவாக்கும் பணிகள், 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. கிராமங்களை பொறுத்தமட்டில், ஒவ்வொரு கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட பகுதியிலும், கால்நடை வளர்ப்போர், சங்க உறுப்பினர்களாக சேர முனைப்புடன் பதிவு செய்தும் வருகின்றனர்,' என்றனர்.