/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிணற்றில் விழுந்த ஆடு, நாய் மீட்பு
/
கிணற்றில் விழுந்த ஆடு, நாய் மீட்பு
ADDED : பிப் 13, 2025 10:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, நெகமம் என்.சந்திராபுரத்தில் கோவில் கிணறு அருகே, ஆடு மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்தது. எதிர்பாராத விதமாக ஆடு கிணற்றில் தவறி விழுந்தது. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலை அலுவலர் கணபதி தலைமையில், வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். வறண்ட கிணற்றில் இறங்கி தீயணைப்பு வீரர்கள், ஆட்டை உயிருடன் மீட்டு உரிமையாளருடன் ஒப்படைத்தனர்.
இதுபோன்று, தொண்டாமுத்துாரில், 60 அடி ஆழம் உள்ள வறண்ட கிணற்றில் நாய் தவறி விழுந்ததாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத்துறையினர், நாயை உயிருடன் மீட்டனர்.