தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வெள்ளாடுகள் வளர்ப்பு மாவட்டத்தில் அதிகரிப்பு

 வெள்ளாடுகள் வளர்ப்பு மாவட்டத்தில் அதிகரிப்பு

 வெள்ளாடுகள் வளர்ப்பு மாவட்டத்தில் அதிகரிப்பு


ADDED : மார் 05, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

-- நமது நிருபர் -:

கோவை, திருப்பூர் மாவட்டங்களில், பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் விவசாயம், தென்னை சாகுபடி பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு தொழில் அதிகளவில் நடக்கிறது.

மேலும், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை சார்பில்,

விவசாயிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக அவர்கள் பல்வேறு தகவல்களை பெறுகின்றனர்.

இந்நிலையில், திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள, கால்நடை மருத்துவ ஆராய்ச்சி பல்கலையில், வெள்ளாடு வளர்ப்பு குறித்து பயிற்சி முகாம் நடந்தது. பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் பங்கேற்றனர்.

கால்நடை பல்கலை தலைவர் மதிவாணன் பேசுகையில், 'நம் மாவட்டத்தில் வெள்ளாடு வளர்ப்பு தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ஆடுகளுக்கு நேரத்துக்கு தேவையான அடர்தீவனம் அளிப்பதும், ஆட்டுப் பட்டிகளை சுத்தமாக வைத்துக் கொள்வதும், நோய் தடுக்கும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதும் வெள்ளாடு வளர்ப்புக்கு உதவும்'' என்றார்.

பின்னர் கால்நடை வளர்ப்போரின் சந்தேகங்களுக்கு, கால்நடைத்துறையினர் விளக்கமளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us