/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவிலுக்கு நேர்ந்து விட்ட ஆடு காணவில்லை: போலீசில் புகார்
/
கோவிலுக்கு நேர்ந்து விட்ட ஆடு காணவில்லை: போலீசில் புகார்
கோவிலுக்கு நேர்ந்து விட்ட ஆடு காணவில்லை: போலீசில் புகார்
கோவிலுக்கு நேர்ந்து விட்ட ஆடு காணவில்லை: போலீசில் புகார்
ADDED : செப் 20, 2024 10:18 PM
மேட்டுப்பாளையம் : காரமடை அருகே மதுரை வீரன் கோவிலுக்கு நேர்ந்து விட்ட ஆட்டு கிடாயை காணவில்லை என அப்பகுதி மக்கள், காரமடை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.
காரமடை அருகே புத்தர் நகர் பகுதியில், மதுரை வீரன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் அப்பகுதியை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த நாகேந்திரன், 40, என்பவர் கடந்த 2ம் தேதியன்று நடந்த மதுரை வீரன் கோவில் திருவிழாவின் போது, 2 வயது ஆட்டுக்கிடாயை கோவிலுக்கு தானமாக கொடுத்துள்ளார். அதற்கு வீரா என்ற பெயர் சூட்டப்பட்டு, ஊர் பொதுமக்களால் வளர்த்து வரப்பட்டது.
இதனிடையே, அப்பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருந்த நேர்ந்து விட்ட ஆட்டு கிடாயை கடந்த 17ம் தேதி முதல் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பல்வேறு இடங்களிலும் தேடினார்.
எங்கு தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து, காரமடை போலீஸ் ஸ்டேஷனில் கோவில் நிர்வாக குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.--