/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆடு திருடிய நபர் போலீசில் ஒப்படைப்பு
/
ஆடு திருடிய நபர் போலீசில் ஒப்படைப்பு
ADDED : மார் 21, 2025 10:26 PM
நெகமம்; நெகமம், மெட்டுவாவியில் ஆடு திருடிய நபரை விவசாயிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
நெகமம், மெட்டுவாவியை சேர்ந்தவர் சின்னசாமி, 52, விவசாயி. இவரது தோட்டத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அவ்வழியே பைக்கில் சென்ற இருவர் இதை நோட்டமிட்டு, ஒரு வெள்ளை ஆட்டை திருடி சென்றனர். இதை கண்ட சின்னசாமி மற்றும் அருகில் இருந்த விவசாயிகள் பைக்கில் சென்று, ஆடு திருடிய நபர்களை பிடித்த போது, ஒருவர் தப்பி ஓடிவிட்டார். சிக்கிய ஒருவரை நெகமம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரித்ததில், ஆடு திருடியது, கோவை குனியமுத்தூரை சேர்ந்த சரவணன், 28, மற்றும் அங்கலக்குறிச்சியை சேர்ந்த ரமேஷ், 29, ஆகியோர் என்பது தெரியவந்தது. ஆடு திருட பயன்படுத்திய திருட்டு பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய ரமேைஷ போலீசார் தேடுகின்றனர்.