தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கடவுள் ஒரு போதும் கைவிட மாட்டார் எழுத்தாளர் ராஜேஷ்குமார் பேச்சு எழுத்தாளர் ராஜேஷ்குமார் பேச்சு

 கடவுள் ஒரு போதும் கைவிட மாட்டார் எழுத்தாளர் ராஜேஷ்குமார் பேச்சு எழுத்தாளர் ராஜேஷ்குமார் பேச்சு

 கடவுள் ஒரு போதும் கைவிட மாட்டார் எழுத்தாளர் ராஜேஷ்குமார் பேச்சு எழுத்தாளர் ராஜேஷ்குமார் பேச்சு


ADDED : ஜன 05, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: கடவுளை முழுமையாக நம்பினால், நம்மை ஒரு போதும் கைவிட மாட்டார், என, எழுத்தாளர் ராஜேஷ்குமார் காரமடையில் பேசினார்.

காரமடை எஸ்.வி.டி., பசுமை அறக்கட்டளை சார்பில், அரங்கநாதர் கோயிலில், வாரம் ஒரு பக்தி சொற்பொழி நடைபெறுகிறது. நிர்வாகிகள் ஆன்மிக பேச்சாளர்களை அழைத்து வந்து, பக்தி சொற்பொழிவை ஆற்றி வருகின்றனர்.

420வது வார நடந்த பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளையின் நிறுவனர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலர் அமரகவி வரவேற்றார்.

'இறைவன் இருக்கிறான்' என்ற தலைப்பில் எழுத்தாளர் ராஜேஷ்குமார் பேசியதாவது:

தான் செய்த பாவங்களை மனமுவந்து மன்னித்தாலும், கர்மா நம்மை விட்டு விலகாது. எனவே யாரையும் துன்புறுத்தும் வகையில், பேசுவதை தவிர்க்க வேண்டும். கடவுளிடம் மனமுவந்து உருக்கமாக வேண்டினால், நம்மை ஒருபோதும் அவர் கைவிட மாட்டார். நம்மை காப்பாற்றுவார். இறைவனிடம் நாம் சரணாகதி அடைய வேண்டும். நாம் நல்லவனாக இருந்தால், நல்லது நடக்கும். துன்பம் செய்தால் அது கர்மாவாக மாறி, நம்மை பின் தொடரும். இவ்வாறு, அவர் பேசினார்.

அறக்கட்டளை நிர்வாகி ராஜேந்திரன் நன்றி கூறினார். 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us