/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோதவாடி குளத்துக்கு நொய்யல் உபரிநீர் வரணும்! நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க இதுவே வழி
/
கோதவாடி குளத்துக்கு நொய்யல் உபரிநீர் வரணும்! நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க இதுவே வழி
கோதவாடி குளத்துக்கு நொய்யல் உபரிநீர் வரணும்! நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க இதுவே வழி
கோதவாடி குளத்துக்கு நொய்யல் உபரிநீர் வரணும்! நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க இதுவே வழி
ADDED : மே 26, 2025 04:46 AM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அருகேயுள்ள, கோதவாடி குளத்துக்கு நொய்யல் ஆற்றின் உபரி நீர் கொண்டு வர வேண்டுமென, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிணத்துக்கடவு அருகேயுள்ள, கோதவாடி குளம், 384 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவு இல்லாததால், இந்த குளம் வறட்சியாக காணப்படுகிறது.
மேலும், கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இப்பகுதியில், தென்னை, வாழை, பயிர் வகைகள் போன்றவைகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன.
மழை பொழிவு குறைவு, நிலத்தடி நீர்மட்டம் சரிவால், இப்பகுதியில் விவசாயம் பாதிப்படையும் நிலையில் உள்ளது. மேலும், ஊராட்சி பகுதிகளில் பொது போர்வெல்லிலும் தண்ணீர் அளவு குறைந்ததால், மாற்று இடங்களில் போர்வெல் அமைக்கப்பட்டு அதன் வாயிலாக மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இதே நிலை தொடர்ந்தால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயமும் பாதிக்கப்படுகிறது. இதைத் தவிர்க்க, கோவை, நொய்யல் ஆற்றில் மழைக்காலங்களில் செல்லும் உபரிநீரை, 15 கி.மீ., தொலைவில் உள்ள கோதவாடிக்கு, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாய்க்கால் வெட்டி, தண்ணீரைக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு செய்தால், கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் உள்ள விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை எளிமையாக சமாளிக்க முடியும். விவசாயமும் பாதிக்கப்படாது.
இதுகுறித்து, மக்கள் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால், கோதவாடி குளம் வறண்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இரு முறை பி.ஏ.பி., திட்டத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு தண்ணீர் வழங்கப்பட்டது. ஆனால் ஒரு முறை கூட குளம் முழுமையாக நிரம்பவில்லை.
நொய்யல் ஆற்றில் இருந்து, கோதவாடி குளத்துக்கு தண்ணீர் கொண்டு வருவது குறித்து, பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். ஆனால், நொய்யல் ஆற்று நீரை கொண்டு வருவதற்கு தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் இல்லை என பதிலளித்துள்ளனர்.
தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் வாய்க்கால் வெட்டி பல பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
ஆனால், தற்போது தொழில் நுட்பங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளது. இன்றைய காலகட்டத்திலும் அதே பதிலையே அதிகாரிகள் தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது. எனவே, நொய்யல் உபரிநீரை கோதவாடி குளத்துக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.