ADDED : ஆக 12, 2025 07:17 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், தேசிய ஹிந்து கோவில் அறக்கட்டளை சார்பில் கோகுலாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது.
தேசிய ஹிந்து கோவில் அறக்கட்டளை மற்றும் பொள்ளாச்சி ஈஸ்வரி சமூக சேவை அறக்கட்டளை சார்பில், கோகுலாஷ்டமி மற்றும் ஆண்டு விழா, உடுமலை ரோடு சரோஜினி மகாலில் நடந்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் சங்கமேஸ்வரி, காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து, பிருந்தாவனக் காட்சியை நினைவூட்டினர். குழந்தைகள், புல்லாங்குழலை இசைத்து அசத்தினர். பல்வேறு விருதுகளும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
அரிமா சங்க செயலாளர் ராஜேந்திரகுமார், ஒருங்கிணைந்த சிவனடியார்கள் திருக்கூட்டத் தலைவர் மாணிக்கவாசகம், உலக சிவனடியார்கள் திருக்கூட்ட நிர்வாகி உமா மகேஸ்வரி, தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.