/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவிலில் கோகுலாஷ்டமி கிருஷ்ணரான மழலைகள்
/
கோவிலில் கோகுலாஷ்டமி கிருஷ்ணரான மழலைகள்
ADDED : ஆக 18, 2025 09:05 PM

வால்பாறை; வால்பாறை விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த கிருஷ்ணஜெயந்தி விழாவுக்கு, விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் நாட்ராயசாமி, செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் குட்டன்திருமேணி வரவேற்றார். விழாவில், கிருஷ்ணர் படத்திற்கு மாலை அணிவித்து, பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடினர். கிருஷ்ணர், ராதை வேடமணிந்த குழந்தைகள், நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.
குழந்தைகளுக்கு, டாக்டர் முனுசாமி, முருகன் நற்பணி மன்ற செயலாளர் சிங்காரம் ஆகியோர் பரிசு வழங்கினர். வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியிலிருந்தும் நுாற்றுக்கணக்கான குழந்தைகள் கலந்து கொண்டனர்.