/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் பண்டிகைக்கு கோலப்பொடி விற்பனை
/
பொங்கல் பண்டிகைக்கு கோலப்பொடி விற்பனை
ADDED : ஜன 12, 2026 06:44 AM

வால்பாறை: மார்கழி மாதம் துவங்கி தை மாதம் வரை பண்டிகைகள் ஏராளம் என்பதால், மக்கள் தங்கள் வீடுகளில் வண்ண கோலமிட, கடைகளில் கோலப்பொடிகளை வாங்கி செல்கின்றனர்.
வால்பாறை மலைப்பகுதியை பொருத்த வரை, பெரும்பாலான எஸ்டேட் கோவில்களில் பொங்கல் திருவிழா வெகுவிமரிசை யாக கொண்டாடப்படுகிறது.
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியைச்சேர்ந்த மக்கள், சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் வண்ண கோலப்பொடிகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
வியபாரிகள் கூறுகையில், 'மார்கழி மாதம் துவங்கிய நாளில் இருந்து கோலப்பொடி விற்பனை நடக்கிறது. இருப்பினும் பொங்கல் பண்டிகை வருவதால், மக்கள் ஆர்வத்துடன் கோலப்போடிகளை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
10 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை தனித்தனி பாக்கெட்களில் கோலப்பொடி விற்பனை செய்யப்படுகிறது,' என்றனர்.

