/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மூதாட்டியிடம் தங்கச் செயின் பறிப்பு
/
மூதாட்டியிடம் தங்கச் செயின் பறிப்பு
ADDED : டிச 09, 2024 11:05 PM
மேட்டுப்பாளையம்; வீட்டின் முன்பு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த மூதாட்டியிடம், தங்கச் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் காரமடை டி.ஜி. புதூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மா, 75. இவர் தனது வீட்டின் முன்பு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவர், மேட்டுப்பாளையம் செல்வதற்கு வழி கேட்டனர்.
இவர் வழி சொல்லியதும், மீண்டும் செடிகளுக்கு தண்ணீர் பிடித்து ஊற்றும் வேலையில் கண்ணம்மா ஈடுபட்டார். அப்போது பக்கெட்டில் இருந்த தண்ணீரை குனிந்து எடுக்கும் போது, பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த மர்ம நபர், திடீரென கீழே இறங்கி கண்ணம்மா அணிந்து இருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான தங்கச் செயினை பறித்துக் கொண்டு, பைக்கில் ஏறி தப்பிவிட்டார். இதுகுறித்து கண்ணம்மா அளித்த புகாரின் பேரில், காரமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.----