/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூடைப்பந்து போட்டியில் தங்கம்; வெற்றிக்கு வித்திட்ட கோவை வீரர்
/
கூடைப்பந்து போட்டியில் தங்கம்; வெற்றிக்கு வித்திட்ட கோவை வீரர்
கூடைப்பந்து போட்டியில் தங்கம்; வெற்றிக்கு வித்திட்ட கோவை வீரர்
கூடைப்பந்து போட்டியில் தங்கம்; வெற்றிக்கு வித்திட்ட கோவை வீரர்
ADDED : ஏப் 23, 2025 06:41 AM

கோவை; புதுச்சேரியில் நடந்த தேசிய இளைஞர் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற கோவை வீரர் அபாரமாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள ராஜிவ்காந்தி உள் விளையாட்டு மைதானத்தில், 40வது தேசிய இளைஞர் கூடைப்பந்து போட்டி எட்டு நாட்கள் நடந்தது. ஆண்களுக்கான போட்டியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட, 27 அணிகள் விளையாடின.
தமிழ்நாடு அணிக்காக, கோவை மாவட்ட ஆண்கள் விளையாட்டு விடுதியில் பயிலும் மாணவன் தன்வீர் விளையாடினார். அரையிறுதியில் ஹரியானா அணியை எதிர்கொண்ட தமிழ்நாடு அணி வீரர்கள் சவாலான ஆட்டத்தை சந்தித்தனர்.
நிறைவில், 89-81 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணியினரை சந்தித்த தமிழ்நாடு அணியினர், 96-85 என்ற புள்ளிக்கணக்கில் வென்று முதலிடம் பிடித்தனர். தமிழ்நாடு அணிக்காக விளையாடிய வீரர் தன்வீர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார். தங்கம் வென்ற மாணவரை, மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஷ்வரி, கூடைபந்து பயிற்சியாளர் பிரேம்குமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.

