கராத்தே போட்டியில் தங்கம்; மாநில போட்டிக்கு 81 பேர் தகுதி
கராத்தே போட்டியில் தங்கம்; மாநில போட்டிக்கு 81 பேர் தகுதி
ADDED : மே 01, 2025 11:55 PM
கோவை; மாவட்ட சப்--ஜூனியர் கராத்தே போட்டியில், தங்கம் வென்ற, 81 பேர், மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
சின்னவேடம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், நான்காவது கோயம்புத்துார் மாவட்ட சப்-ஜூனியர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள்-2025 நடந்தது. இதில், 5 முதல், 13 வயது வரையிலான வீரர், வீராங்கனைகள், 429 பேர் பங்கேற்றனர்.
இதில், குமிட்டே, கட்டா பிரிவுகளில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர், வீராங்கனைகள், 81 பேர் தங்கப்பதக்கம் வென்றனர். இவர்கள் வரும், 17, 18ம் தேதிகளில் திருச்சியில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
மாநில போட்டியில் வெற்றி பெறுபவர்கள் ஜூன், 14, 15ம் தேதிகளில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். மாவட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தவிர, இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.,) சார்பில் நடந்த கராத்தே போட்டியில், பதக்கம் வென்ற கோவை வீரர்கள் ஆறு பேருக்கும் பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டது. மாவட்ட கராத்தே சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர் ராஜா உள்ளிட்டோர் போட்டிகளை நடத்தினர்.
