ADDED : அக் 08, 2025 11:28 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; ஆந்திர மாநிலம், குண்டூரில், 62வது தேசிய அளவிலான 'செஸ் சாம்பியன்ஷிப்' போட்டி, 11 நாட்கள் நடந்தது. இதில், 14 கிராண்ட் மாஸ்டர்கள், 30 சர்வதேச மாஸ்டர்கள் (ஐ.எம்.,) உட்பட, 395 பேர் பங்கேற்றனர். 11 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் ஏழு சுற்றுகளில் வெற்றி, நான்கு சுற்றுகளில் டிரா என, 9 புள்ளிகளுடன் கோவையை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் இனியன் தங்கம் வென்றுள்ளார்.
ஒன்பதாவது சுற்றில், கிராண்ட் மாஸ்டர் தீபன் சக்ரவர்த்தியையும், 10வது சுற்றில் கிராண்ட் மாஸ்டர் சசிகிரனையும் வெற்றி பெற்றது, இனியனுக்கு முன்னிலையை பெற்றுத்தந்தது.
கேரளாவை சேர்ந்த சர்வதேச மாஸ்டர் கவுதம் கிருஷ்ணா வெள்ளி பதக்கம், கிராண்ட் மாஸ்டர் சசி கிரண் வெண்கலம் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, கோப்பைகள் வழங்கப்பட்டன.