/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிழக்கு மண்டலத்துக்கு புதிய உதவி கமிஷனர்
/
கிழக்கு மண்டலத்துக்கு புதிய உதவி கமிஷனர்
ADDED : அக் 08, 2025 11:27 PM
கோவை; கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனராக இருந்த முத்துசாமியை, புதுக்கோட்டை மாவட்டம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டராக நியமித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசு கூடுதல் தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
கிழக்கு மண்டல உதவி கமிஷனர் பணியிடத்துக்கு, கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியராக இருந்த ராம்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலராக இருந்த கோவிந்த பிரபாகரை, ஈரோடு மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலராக பணிமாறுதல் செய்து, நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதனன் உத்தரவிட்டுள்ளார்.
இவரை பணியில் இருந்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் விடுவித்துள்ளார்.