/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறந்த மருத்துவ சேவைக்கு ' கோல்டன் டாக்டர்' விருது
/
சிறந்த மருத்துவ சேவைக்கு ' கோல்டன் டாக்டர்' விருது
சிறந்த மருத்துவ சேவைக்கு ' கோல்டன் டாக்டர்' விருது
சிறந்த மருத்துவ சேவைக்கு ' கோல்டன் டாக்டர்' விருது
ADDED : அக் 16, 2025 05:39 AM

கோவை: ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் சார்பில், கோவை ரேடிசன் புளூ ஓட்டல் வளாகத்தில் நடந்த விழாவில், மருத்துவ சேவையில் சிறந்து விளங்கும் மருத்துவர்களை ஊக்குவிக்கும் வகையில், கோல்டன் டாக்டர் விருது வழங்கப்பட்டது.
இதில், ராம்நகர், கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் சர்க்கரை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் பாலமுருகனுக்கு, கோல்டன் டாக்டர் விருது வழங்கப்பட்டது. இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில கிளை தலைவர் டாக்டர் செங்குட்டுவன், செயலாளர் கார்த்திக் பிரபு மற்றும் இந்திய மருத்துவ கழகத்தின் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் அபுல் ஹாசன் ஆகியோர், விருதை வழங்கி கவுரவித்தனர்.