ADDED : அக் 16, 2025 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோரால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க, ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை வரும், 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. வடமாநிலத் தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு இப்போதே செல்லத் துவங்கியுள்ளதால், கோவை ரயில்வே ஸ்டேஷனில், நெரிசல் அதிகம் உள்ளது.
இதைத்தவிர்க்க, ரயில்வே போலீசார், வடமாநிலங்கள் செல்லும் பயணிகளை வரிசையில் நிறுத்தி, ரயில் ஏற ஏற்பாடு செய்துள்ளனர்.
பயணிகளின் உடமைகளை சோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர். அனைத்து பிளாட்பாரங்களிலும், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்படுகிறது.