/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருப்பரங்குன்றம் மலையில் கோமாதா பூஜை நடத்தப்படும்!
/
திருப்பரங்குன்றம் மலையில் கோமாதா பூஜை நடத்தப்படும்!
திருப்பரங்குன்றம் மலையில் கோமாதா பூஜை நடத்தப்படும்!
திருப்பரங்குன்றம் மலையில் கோமாதா பூஜை நடத்தப்படும்!
ADDED : ஜன 28, 2025 07:45 AM
பொள்ளாச்சி: திருப்பரங்குன்றம் மலையில், கோமாதா பூஜை செய்தும், திருமுறை பாடல்கள் பாடியும் பரிகாரம் செய்யப்படும், என, ஹிந்து மக்கள் கட்சி (தமிழகம்) அறிவித்துள்ளது.
கோவை தெற்கு மாவட்ட, ஹிந்து மக்கள் கட்சி (தமிழகம்) பொதுக்குழு கூட்டம் பொள்ளாச்சியில் நடந்தது. அதில், பங்கேற்ற கட்சித் தலைவர் அர்ஜூன்சம்பத் கூறியதாவது:
கடந்த, 1998, பிப்., 14ம் தேதி நடந்த கோவை குண்டு வெடிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம், குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு, அஞ்சலி செலுத்தப்படும்.
குண்டு வெடிப்பு கைதி அல் -- உம்மா இயக்க நிறுவனர் பாஷா, உயிரிழந்தபோது, பாதுகாப்பு வழங்கி, இறுதிஊர்வலத்துக்கு அனுமதி வழங்கியது கண்டனத்துக்கு உரியது. அதேநேரம், பயங்கரவாதத்துக்கு எதிராக நடக்க உள்ள நிகழ்வுக்கு போலீசார் உரிய அனுமதி வழங்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் மலையின் புனிதம், எஸ்.டி.பி.ஐ., அமைப்பைச் சேர்ந்தவர்களால் கெட்டு போயுள்ளது. அங்கு, கோமாதா பூஜை செய்தும், திருமுறை பாடல்கள் பாடியும் பரிகாரம் செய்யப்படும்.
பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்க வேண்டும்.மேலும், பிப்., 14 காதலர் தினம் கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

