/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயேசுவின் சிலுவைப்பாடுகளை தத்ரூபமாக நடித்துக்காட்டி புனித வெள்ளி அனுசரிப்பு
/
இயேசுவின் சிலுவைப்பாடுகளை தத்ரூபமாக நடித்துக்காட்டி புனித வெள்ளி அனுசரிப்பு
இயேசுவின் சிலுவைப்பாடுகளை தத்ரூபமாக நடித்துக்காட்டி புனித வெள்ளி அனுசரிப்பு
இயேசுவின் சிலுவைப்பாடுகளை தத்ரூபமாக நடித்துக்காட்டி புனித வெள்ளி அனுசரிப்பு
ADDED : ஏப் 19, 2025 03:16 AM

கோவை: இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில், நேற்று புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வை, கிறிஸ்தவர்கள் நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் தவக்காலம் கடைபிடித்து ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுகின்றனர்.
இந்தாண்டு தவக்காலம் மார்ச் 5ம் தேதி, 'சாம்பல் புதன்' துவங்கியது. தவக்காலத்தின் கடைசி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக, இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் நேற்று புனித வெள்ளியை முன்னிட்டு பெரிய சிலுவைப்பாதை வழிபாடுகள் நடந்தன.
போத்தனுார், கார்மல் அன்னை ஆலயத்தில், பங்குத்தந்தை ரசல் ராஜ் தலைமையில் நடந்த பெரிய சிலுவை பாதை நிகழ்வில், இயேசுவின் சிலுவைபாடுகளை, பங்கு மக்கள் தத்ரூபமாக நடித்து காட்டினர்.
இதேபோல், மாநகரில் புனித மிக்கேல் அதிதுாதர் ஆலயம், புலியகுளம் புனித அந்தோணியார் தேவாலயம், காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம், கோவைப்புதுார் குழந்தை இயேசு ஆலயம், போத்தனுார் புனிய சூசையப்பர் ஆலயம், கார்மெல் நகர் கார்மெல் அன்னை ஆலயம், கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பசிலிக்கா உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்கள் சி.எஸ்.ஐ., கிறிஸ்து நாதர் ஆலயம், இம்மானுவேல், ஹோலி டிரினிட்டி உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில், பெரிய சிலுவை பாதை நடந்தது.
இதில், கிறிஸ்தவர்கள் வீதிகளில் பவனியாக சென்று, தேவாலயங்களை அடைந்தனர். தொடர்ந்து, தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
நாளை இயேசு சிலுவையில் இருந்து உயிர்த்தெழுந்த நிகழ்வு, ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படவுள்ளது.