தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேவாலயங்களில் புனித வெள்ளி வழிபாடு

 தேவாலயங்களில் புனித வெள்ளி வழிபாடு

 தேவாலயங்களில் புனித வெள்ளி வழிபாடு


ADDED : ஏப் 03, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 07:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில், தேவாலயங்களில் புனித வெள்ளி வழிபாடுகள் நடந்தன; திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.

புனித வெள்ளியை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் தேவாலயத்தில், நேற்று பெரிய சிலுவை பாதை நிகழ்வு நடந்தது. முன்னதாக, காலை 6:00 மணியிலிருந்து நற்கருணை ஆராதனையை, ஒவ்வொரு அன்பியம் குடும்பத்தினர், பக்த சபையினர், சிஸ்டர் ஆகியோர் சிறப்பித்தனர். பின், பங்கு பாதிரியார் பிலிப், சிலுவை பாதை நிகழ்வை துவக்கி வைத்தார். கோவை நல்லாயன் குருமடம் பாதிரியார் டேவிட்ஜான், சிலுவை பாதை நிகழ்வை வழி நடத்தினார்; திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர். வின்சென்ட் தேபவுல் சபையினர், மக்களுக்கு நீர்மோர் வழங்கினர்.

* மேட்டுப்பாளையம் காட்டூர் புனித ஜோசப் தேவாலயத்தில், இயேசுவின் சிலுவை பாதை பாடுகளை, இளைஞர்கள் நடித்தனர். பங்கு பாதிரியார் தேவாலய நிர்வாக கமிட்டி நிர்வாகிகள், கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.

* மேட்டுப்பாளையம் காரமடை சாலையில், சிவன்புரத்தில் உள்ள அற்புத கெபி ஆரோக்கிய அன்னை தேவாலயம், ஊட்டி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., தேவாலயம் ஆகியவற்றில் புனித வெள்ளி வழிபாடுகள் நடந்தன; திரளான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us