/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'உங்கள் வாழ்வின் அரணாக காக்கும் நல்ல குணங்கள்'
/
'உங்கள் வாழ்வின் அரணாக காக்கும் நல்ல குணங்கள்'
ADDED : ஜூலை 13, 2025 12:26 AM

கோவை : குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லுாரியில், 2025-26 கல்வி ஆண்டின் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும், 'ஸ்வாகதம்' நிகழ்ச்சி கல்லுாரி வளாகத்தில் நடந்தது. குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வாணவராயர் நிகழ்விற்கு தலைமை வகித்தார்.
அவர் பேசுகையில், ''கல்லுாரி துவக்கத்திலே, தங்கள் இலக்கை மாணவர்கள் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேற வேண்டும். நமது நல்ல குணங்கள் வாழ்நாள் முழுவதும் அரணாக காக்கும். உடல், மன நலனில் மாணவர்கள் அக்கறையுடன் இருக்க வேண்டும்,'' என்றார்.
குமரகுரு கல்வி நிறுவனங்களின், குளோபல் என்கேஜ்மென்ட் துறை இயக்குனர் விஜிலா, கல்லுாரியின் முதல்வர் தீபேஷ் சந்திரசேகரன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.