/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது
/
பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது
ADDED : பிப் 13, 2025 09:32 PM
பொள்ளாச்சி, ; நெகமம் அருகே, சின்னேரிபாளையம் ஸ்வஸ்திக் மெட்ரிக் பள்ளி ஆங்கில ஆசிரியர் மோகன்ராஜ். இவர், சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கான கற்பித்தல் பணிகளை எளிதாக்கி வருகிறார்.
ஆங்கில இலக்கணத்தை விளையாட்டு வழியிலும், முக்கிய தினங்களில் 'ஆன்லைன்' வினாடி - வினா போட்டி நடத்தி மாணவ, மாணவியரை ஊக்குவித்தும் வருகிறார். இவரது சேவையைப் பாராட்டி, நேரு கல்விக் குழுமம் வாயிலாக நல்லாசிரியர் விருது வழங்கும் விழா, அக்கல்லுாரியில் நடந்தது. நேரு கல்விக்குழுமங்களின் தலைவர் கிருஷ்ணதாஸ், கல்லுாரி சி.இ.ஓ., கிருஷ்ணகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) புனிதாஅந்தோணியம்மாள் ஆகியோர், ஆசிரியர் மோகன்ராஜ்க்கு நல்லாசிரியர் விருது மற்றும் ரொக்கப் பரிசு வழங்கினர்.

