/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நல்ல எண்ணங்களே நல்வாழ்வை தரும்!'
/
'நல்ல எண்ணங்களே நல்வாழ்வை தரும்!'
ADDED : நவ 10, 2025 11:50 PM

பொள்ளாச்சி: 'நல்ல எண்ணங்களே நல்வாழ்வை தரும்,' என, குழந்தைகள் தின விழாவில் வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி கம்பன் கலைமன்றம் சார்பில், குழந்தைகள் தின விழா லயன்ஸ் கிளப் அரங்கில் நடந்தது. மாணவர் சபரிகிரி வரவேற்றார். கம்பன் கலைமன்ற தலைவர் சண்முகம், தமிழிசை சங்க செயலாளர் சண்முகம், கவுன்சிலர் சாந்தலிங்கம் முன்னிலை வகித்தனர்.
தேவ் கிருஷ் நிறுவனங்களின் தலைவர் நித்யானந்தம் தலைமை வகித்து பேசியதாவது:
குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்கள் கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆன்மிகம், இறை தேடலில் நேர்மறை சிந்தனைகளை உருவாக்க முடியும். சமூக பொறுப்புகளை மாணவர்களிடம எடுத்துக்கூற வேண்டும்.
நல்ல எண்ணங்களே நல்ல மனிதனை உருவாக்கும். அவையே நல்வாழ்வையும் தரும். விடா முயற்சியுடன் கடின உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயமாகும். இவ்வாறு, பேசினார்.
அரசுப்பள்ளிகளை சேர்ந்த குழந்தைகள், பேச்சு, கவிதை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை கம்பன் கலை மன்ற செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் மேற்கொண்டனர்.

