/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எப்., அலுவலகம் சார்பில் 'விக் ஷித் பாரத்' முகாம்
/
பி.எப்., அலுவலகம் சார்பில் 'விக் ஷித் பாரத்' முகாம்
பி.எப்., அலுவலகம் சார்பில் 'விக் ஷித் பாரத்' முகாம்
பி.எப்., அலுவலகம் சார்பில் 'விக் ஷித் பாரத்' முகாம்
ADDED : நவ 10, 2025 11:49 PM
- நமது நிருபர் -: வருங்கால வைப்புநிதி நிறுவனம் சார்பில், மத்திய அரசின் 'விக் ஷித் பாரத்' திட்டம் குறித்த சிறப்பு முகாம் நடந்தது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், 3.5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியாக, மத்திய அரசின் 'பிரதமர் விக் ஷித் பாரத்' திட்டம் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
இதன் வாயிலாக, புதிய தொழிலாளர்களை பி.எப்., திட்டத்தில் பதிவு செய்யும் போது, தொழிலாளருக்கு மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கும் மானிய உதவி வழங்கப்படுகிறது.
அதிகப்படியான வேலை வாய்ப்பு வழங்கும் ஜவுளித்துறைக்காக, இத்தகைய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வாயிலாக, இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியும், தொழிலாளர் பதிவு முகாமும் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் வருங்கால வைப்பு நிதி அலுவலக கமிஷனர் அபிேஷக் ரஞ்சன் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் நிறுவனங்களில் முகாம் நடந்தது.
வருங்கால வைப்பு நிதி அலுவலர்கள் பங்கேற்று, இத்திட்டம் தொடர்பான விபரங்களையும், தொழிலாளருக்கு வங்கி கணக்கில் மானியம் வழங்கப்படுவது குறித்தும் விளக்கி பேசினர்.

