/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குட் டச்... பேட் டச்; 12 ஆயிரம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு
/
குட் டச்... பேட் டச்; 12 ஆயிரம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு
குட் டச்... பேட் டச்; 12 ஆயிரம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு
குட் டச்... பேட் டச்; 12 ஆயிரம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு
ADDED : ஆக 31, 2025 08:28 PM
மேட்டுப்பாளையம்; காரமடை கல்வி வட்டாரத்தில் 12 ஆயிரம் துவக்க பள்ளி குழந்தைகளிடம் குட் டச், பேட் டச், பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவை மாவட்டம் காரமடையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு சார்ந்த பயிற்சி,துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு அண்மையில் வழங்கப்பட்டது.
இதில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்தும், போக்சோ,அதனுடைய சாராம்சம், பாலியல் குற்றங்களில் ஈடுபவர்களுக்கான தண்டனைகள், பாலியல் குற்றங்கள் நேராதவாறு மாணவர்களை பாதுகாப்பது குறித்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியின் வாயிலாக குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுகுறித்து, காரமடை வட்டார கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'காரமடை கல்வி வட்டாரத்தில் 96 அரசு துவக்கப்பள்ளிகளில் சுமார் 12 ஆயிரம் குழந்தைகள் படிக்கின்றனர். குட் டச், பேட் டச், பாலியல் குற்றம் நடக்கும் இடத்தில் குழந்தைகள் மாட்டிக்கொண்டால் எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்' என்றார்.
இதுதவிர காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட 17 ஊராட்சிகளில் குழந்தைகளுக்கு குழந்தைகள் பாலர் சபை துவங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக குழந்தைகளின் கருத்துக்களையும் பிரச்னைகளையும் கேட்டு, அவற்றிற்கு தீர்வு காண முடியும்.
மேலும், கிராம சபை போலவே பாலர் சபைகளிலும் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் கிராம சபைக்கு அனுப்பப்பட்டு அதன் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும்.----