/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டப்பா' பஸ்களுக்கு 'குட்பை' வால்பாறை பயணியர் நிம்மதி
/
'டப்பா' பஸ்களுக்கு 'குட்பை' வால்பாறை பயணியர் நிம்மதி
'டப்பா' பஸ்களுக்கு 'குட்பை' வால்பாறை பயணியர் நிம்மதி
'டப்பா' பஸ்களுக்கு 'குட்பை' வால்பாறை பயணியர் நிம்மதி
ADDED : அக் 03, 2024 05:01 AM

வால்பாறை : வால்பாறையில் காலாவதியான பழைய பஸ்கள் இயக்கபடும் நிலையில், புதிய பஸ்கள் வந்துள்ளதால், பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், 38 வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர, நான்கு ஸ்பேர் பஸ்களும் இயக்கப்படுகின்றன. குறிப்பாக பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், பழநி, சேலம், மன்னார்க்காடு உள்ளிட்ட வெளியூர்களுக்கும் வால்பாறையிலிருந்து நேரடி பஸ் இயக்கப்படுகிறது.
இந்நிலையில், வால்பாறையில் இருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள், ஊட்டி, மேட்டுப்பாளையம், கோவை ஆகிய பகுதிகளில் இயக்கப்பட்டவை. அந்த பஸ்கள் வால்பாறை மலைப்பகுதியில் அடிக்கடி பழுதாகி நின்று விடுவதாலும், மழை காலத்தில் உள்பகுதியில் தண்ணீர் ஒழுகுவதாலும், பயணியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதனால், பழைய பஸ்களை மாற்றி, புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என பயணியர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் வெளியூர்களுக்கு முதல் கட்டமாக, நான்கு புதிய பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் பயணியர் நிம்மதியடைந்துள்ளனர்.
அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை மலைப்பகுதியில் இயக்கப்படும் அனைத்து பழைய பஸ்களும், மாற்றி புதிய பஸ்கள் இயக்கப்படும். முதல் கட்டமாக நான்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் ஐந்து மினி பஸ்கள் விரைவில் வால்பாறை வழித்தடத்தில் இயக்கப்படும்,' என்றனர்.