/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழைய இரும்பு பாலத்துக்கு குட்பை; புதிய கான்கிரீட் பாலம் அமைப்பு
/
பழைய இரும்பு பாலத்துக்கு குட்பை; புதிய கான்கிரீட் பாலம் அமைப்பு
பழைய இரும்பு பாலத்துக்கு குட்பை; புதிய கான்கிரீட் பாலம் அமைப்பு
பழைய இரும்பு பாலத்துக்கு குட்பை; புதிய கான்கிரீட் பாலம் அமைப்பு
ADDED : ஆக 26, 2025 10:24 PM

பெ.நா.பாளையம்; என்.ஜி.ஜி.ஓ., காலனி அருகே பழைய இரும்பு பாலம் அகற்றப்பட்டு புதிய கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை-மேட்டுப்பாளையம் இடையே உள்ள ரயில் பாதையில் தினசரி, 10 முறை மேட்டுப்பாளையம், கோவை இடையே பாசஞ்சர் ரயில் இயங்கி வருகிறது. அவ்வப்போது பெய்து வரும் தொடர் மழையால் ரயில் பாதை செல்லும் பாலங்களை ஒட்டிய பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தடுப்பணைகள் நிறைந்து நீர் வழிந்து வருவதால், பாலத்தை தாங்கி நிற்கும் கல்தூண்களை செப்பனிட்டு, அதை பலப்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி என்.ஜி.ஜி.ஓ., காலனி அருகே உள்ள லட்சுமி நகர் ரயில்வே பாலத்தின் கீழ் உள்ள கல் தூணை சுற்றி கான்கிரீட் அமைக்கப்பட்டு, இரும்பு ரயில் பாலத்தை மாற்றி, புதியதாக கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் செல்லும் பாலத்தின் தாங்கு திறன் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
என்.ஜி.ஜி.ஓ., காலனி லட்சுமி நகர் ரயில்வே பாலத்தில் இப்பணி மேற்கொள்ளப்பட்டதால், கடந்த, 21, 22 தேதிகளில் பொதுமக்கள், லட்சுமி நகர் ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் வாகனத்தில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பணிகள் முடிந்ததையடுத்து லட்சுமி நகர் ரயில்வே பாலத்தின் கீழ் வாகனங்களில் பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.