/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு உதவி பெறும் கல்லுாரி அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அரசு உதவி பெறும் கல்லுாரி அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
அரசு உதவி பெறும் கல்லுாரி அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
அரசு உதவி பெறும் கல்லுாரி அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 25, 2025 12:31 AM

கோவை: தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லுாரி அலுவலர் சங்கம் சார்பில், கோவை ரேஸ்கோர்ஸ் மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
'அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு பணி நியமனம், பணி உயர்வு, தேர்வு நிலை, சிறப்பு நிலை மற்றும் ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும். கருணை அடிப்படை நியமனங்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி ஒப்புதல் வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு மண்டலத் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். மண் டல செயலாளர் முருகையா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.