/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழைக்கு ஒழுகும் அரசு கட்டடங்கள்
/
மழைக்கு ஒழுகும் அரசு கட்டடங்கள்
ADDED : ஜூன் 26, 2025 09:45 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள, அரசு கட்டடங்களில் மழை நீர் ஒழுகுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள, இ-சேவை மைய கட்டட முன்பகுதியில், மீட்டர் பெட்டி மற்றும் அதன் மேற்கூரையில் மழை நீர் வடிவதால் மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அதிகளவு மக்கள் வந்து செல்லும் இடத்தில், மின்பெட்டி இருக்கும் இடத்தில் மழை நீர் ஒழுகி தரையில் தேங்குகிறது.
இதனால், அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், மழை நீர் ஒழுகும் பகுதியை கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.
இதே போன்று, கிணத்துக்கடவு சார்-பதிவாளர் அலுவலகத்தில், பத்திர பதிவு செய்யும் நபர்கள் அமரும் அறையில், தகர சீட்டுகள் வழியாக மழைநீர் அதிகமாக ஒழுகி, அறையினுள் தேங்கியுள்ளது.
இதனால், பத்திரப்பதிவுக்கு வரும் மக்கள் அருகில் உள்ள கடைகள் மற்றும் பேக்கரிகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பத்திரப்பதிவு செய்பவர்கள் அமரும் அறையின் மேற்கூரையை விரைவில் சரி செய்ய வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.