/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீப்பற்றி எரிந்த அரசு பஸ்; பயணிகள் உயிர் தப்பினர்
/
தீப்பற்றி எரிந்த அரசு பஸ்; பயணிகள் உயிர் தப்பினர்
ADDED : அக் 24, 2024 09:59 AM

கோவை: பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பஸ் கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி இன்று காலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.பஸ்ஸை சுரேஷ் என்பவர் ஓட்டி வந்த நிலையில் 40க்கும் மேற்பட்டோர் அதில் பயணம் செய்தனர். இந்த நிலையில் பஸ் மயிலேறிபாளையம் பிரிவை கடந்து வந்தபோது, என்ஜினில் இருந்து புகை வருவதை கண்ட நடத்துனர் கதிரேஷ், உடனடியாக ஓட்டுனரிடம் கூறியுள்ளார்.
இதை அடுத்து ஒத்தக்கால் மண்டபம் அடுத்த பிரீமியர் நகர் பகுதியில் பஸ்iஸ நிறுத்திய ஓட்டுனர், பஸ்ஸில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி விட்டார். அப்போது, மள மளவென பரவிய தீ கொழுந்து விட்டு எரியவே, உடனடியாக அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பஸ்ஸில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
இருப்பினும், பஸ் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உடனடியாக பஸ்ஸை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.