/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடைந்த கண்ணாடியுடன் வலம் வரும் அரசு பஸ்கள்
/
உடைந்த கண்ணாடியுடன் வலம் வரும் அரசு பஸ்கள்
ADDED : ஜூலை 12, 2025 12:58 AM

தொண்டாமுத்தூர்; ஆலாந்துறை, சிறுவாணி மெயின் ரோட்டில் வரும், பெரும்பாலான அரசு பஸ்களில், முன்பக்க கண்ணாடி உடைந்த நிலையில் உள்ளதால், அச்சத்திலேயே பொதுமக்களும், மாணவர்களும் பயணம் செய்து வருகின்றனர்.
கோவையின் மேற்கு புறநகர் பகுதியில், முக்கிய சாலைகளில் ஒன்றாக சிறுவாணி மெயின் ரோடு உள்ளது. இந்த பகுதியில், சாடிவயல், சிறுவாணி, ஈஷா, பூண்டி ஆகிய பகுதிகளுக்கு, நாள்தோறும், 20க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நாள்தோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த பஸ்களில், 8 பஸ்களின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து, எப்போது வேண்டுமானாலும் விழும் நிலை உள்ளது.
இந்த வழித்தடத்தில் ஏராளமான வேகத்தடைகளும் உள்ளன. இதனால், இந்த பஸ்கள் சாலையில் செல்லும்போது, எப்போது வேண்டுமானாலும் கண்ணாடிகள் உடைந்து கீழே விழும், இதனால், காயங்கள் ஏற்படுமோ என்ற அச்சத்திலேயே, பயணிகள் பயணித்து வருகின்றனர்.
எனவே, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் இவற்றை மாற்றி அமைக்க வேண்டும்.

