/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுச்சுவர் இல்லாத அரசு கல்லுாரி
/
சுற்றுச்சுவர் இல்லாத அரசு கல்லுாரி
ADDED : மே 18, 2025 10:14 PM
வால்பாறை ; வால்பாறை நகரின் மத்தியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. கல்லுாரியில் தற்போது, 980 மாணவர்கள் படிக்கின்றனர்.
கல்லுாரி வளாகத்தில், முதலாமாண்டு மாணவர்களுக்காக கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை சுற்றிலும், சுற்றுச்சுவர் இல்லாததால், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் போதிய பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், ' கல்லுாரியின் பின்புறம் சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரத்தில் சமூக விரோதிகள் நடமாடும் இடமாகவும் மாறிவருகிறது. மாணவர்கள் பாதுகாப்பு கருதி, கல்லுாரியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.